தாய்லாந்தில் ராணுவ வீரர் கண்மூடித்தனமாக சுட்டதில் 21 பேர் உயிரிழப்பு!

தாய்லாந்து நாட்டின் வடகிழக்கு பாங்காக்கில் உள்ள கொராட் மாகாணத்தில் உள்ள ராணுவ தளத்தில் பணியாற்றிய மேஜர் ஜக்ரபந்த் தொம்மா ஜாக்ரத்த் தோமா என்பவர், தனது உயரதிகாரி ஒருவரை சுட்டுக் கொன்றுள்ளார்.

தாய்லாந்து நாட்டின் வடகிழக்கு பாங்காக்கில் உள்ள கொராட் என்ற இடத்தில் டெர்மினல் 21 என்ற வணிக வளாகம் அருகே அந்த ராணுவ வீரர் பொதுமக்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டுள்ளார்.

Image

அங்கிருந்த 21 பேர் பலியாகினர், மேலும் 30 க்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இந்திய நேரப்படி நேற்று (பிப்.,08) பகல் 3 மணியளவில் இந்த தாக்குதல் துவங்கி உள்ளது.

Image

டெர்மினல் 21 வணிக வளாகத்தில் ஏராளமானோரை அவர் பிணையக் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து, பாதுகாப்புப் படையினர் மீட்பு நடவடிக்கைகளில் இறங்கினர்.அடுத்தடுத்து பலமுறை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

இரவு முழுவதும் நடந்த போராட்டத்திற்கு பிறகு தாக்குதலில் ஈடுபட்ட ராணுவ வீரரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்று, பிணைகைதிகளாக இருந்தவர்களை மீட்டுள்ளனர்.

Image

தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது, சம்பவம் நடப்பதற்கு முன்பு, கொலைச் செயலில் ஈடுபட்டவர் தனது பேஸ்புக் பக்கத்தில், கையில் துப்பாக்கியுடன் கருப்பு நிற முகமூடி அணிந்த போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Image

இந்த பதிவு நீக்கப்பட்டு விட்டதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர்களுக்கு தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓசா ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.



Comments are closed.

https://newstamil.in/