தளபதி 65 மீண்டும் சன் பிக்சர்ஸ் தயார்?

மாநகரம், கைதி பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தனது 64வது படத்தில் நடித்து வருகிறது. சென்னை, டெல்லி என படபிடிப்புகள் முடிந்துள்ள நிலையில் கர்நாடகாவின் ஷிமோகாவில் தற்போது படத்தின் ஷூட்டிங் வேலைகள் நடைபெற்று வருகிறது.

2020-ம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் படப்பிடிப்பு நிறைவடைந்து ஏப்ரல் மாதத்தில் இந்தப் படம் திரைக்கு வர உள்ளது.

இதனையடுத்து, விஜயின் அடுத்த படத்தை வெற்றிமாறன் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால், வெற்றிமாறனோ தாணு தயாரிப்பில் சூர்யாவின் 40 வது படத்தை இயக்கவுள்ளதாக அண்மையில் செய்தி வெளியானது.

இதனால் விஜய்யின் 65-வது படத்தை இயக்கும் இயக்குநர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

இந்நிலையில், சர்கார் படத்துக்கு பிறகு மீண்டும் விஜயை வைத்து படம் தயாரிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதற்கு விஜய் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுவரை விஜய் 65 இயக்குநர் குறித்து தகவல்கள் எதுவும் உறுதியாக நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளது விஜய் ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் விஜய் 64க்கு பிறகு அவரது 65வது படத்தையும் லோகேஷ் கனகராஜே இயக்கவுள்ளார் என முன்பே தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் தடம் படத்தை இயக்கிய மகிழ் திருமேனி விஜய் 65 படத்தை இயக்குவார் எனவும் கோலிவுட் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.



Comments are closed.

https://newstamil.in/