சூரிய கிரகணம் நிலவு 3 நிமிடங்களுக்கு மேல் மறைத்த‌து; நெருப்பு வளைய சூரிய கிரகணம்! – வீடியோ

வானில் தோன்றும் அரிய நிகழ்வான நெருப்பு வளைய சூரிய கிரகணம் காலை 8 மணிக்கு துவங்கி உள்ளது. சவுதி அரேபியாவின் கடல் பகுதி மற்றும் ஊட்டியில் பகுதி நேர சூரிய கிரகணம் தெரிய துவங்கியது.

அமாவாசையன்று நிலவு, சூரியனை மறைக்கும் நிகழ்வு 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அதிசய நிகழ்வாக நெருப்பு வளையத்துடன் சூரிய கிரகணம் தோன்றியது. சூரிய கிரகணம் இந்தியாவில் காலை 9.13 வரை தோன்றியது. தமிழகத்தில் முழு சூரிய கிரகண நெருப்பு வளையம் 9.34 மணிக்கு தோன்றியது.

சென்னை மற்றும் புதுச்சேரியில் 9.34 மணிக்கும், நாகர்கோவில் மற்றும் சேலம் பகுதிகளில் 9.31 மணிக்கும், மண்டபத்தில் 9.33 மணிக்கும் சூரிய கிரகணம் தோன்றியது. சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது என அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.

அதற்கான கண்ணாடியை பயன்படுத்தி பார்க்கலாம் எனவும், தொடர்ச்சியாக கிரகணத்தை பார்க்கக் கூடாது எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.



Comments are closed.

https://newstamil.in/