லைகாவிற்கு கமல் எழுதிய உருக்கமான கடிதம்
சென்னை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் கடந்த 19-ம் தேதி நடைபெற்ற இந்தியன் 2 படப்பிடிப்பின் போது கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் பலியாகினர். இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து தொடர்பாக 6 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் லைகா நிறுவனத்திற்கு கமல் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது : மிகுந்த மன வேதனை உடன் இந்த கடிதத்தை எழுதுகிறேன். பிப்., 19 சம்பவத்தை இன்னமும் என்னால் மறக்க முடியவில்லை.
நம்மாடு உண்டு, சிரித்து, பழகி, வேலை செய்தவர்கள் இப்போது இல்லை. விபத்து நேர்ந்த இடத்திலிருந்து சில மீட்டர்கள் தான் தள்ளி இருந்தேன். மயிரிழையில் உயிர் தப்பினேன். என் வேதனையை விவரிக்க வார்த்தைகள் இல்லை.
படப்பிடிப்பு தளத்தில் கதாநாயகன் முதல் கடைநிலை ஊழியர் வரை பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இதுபோன்ற விபத்துகள் படப்பிடிப்பு குழுவினரின் நம்பிக்கையை குலைக்கும். என்ன விபத்து ஏற்பட்டாலும் அதற்கான இழப்பீடு உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
இனி படப்பிடிப்பு தளத்தில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அதன் முழு பொறுப்பையும் தயாரிப்பு நிறுவனம் ஏற்க வேண்டும். எந்த ஒரு படப்பிடிப்பு துவங்கும் முன்பு பாதுகாப்பு அம்சங்கள் சரியாக இருக்கிறதா என பரிசோதிக்க வேண்டும். நான் உட்பட படப்பிடிப்பு குழுவிற்கு நம்பிக்கையை ஏற்படுத்தி படப்பிடிப்புக்கு திரும்ப வழி வகை செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.