வன்முறையாளர்களைக் கண்டதும் சுட உத்தரவு; பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் – டில்லி போலீசார்

டெல்லியில் சட்டம் ஒழுங்கைக் கட்டுப்படுத்த வன்முறையாளர்களைக் கண்டதும் சுடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது செய்திகள் பரவியது.

நேற்று இரவில் டெல்லியின் பல பகுதிகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் டெல்லி வந்திருந்த நிலையிலும் பல்வேறு பகுதிகளிலும் கலவரம் நீடித்தது. இந்தநிலையில், வடகிழக்கு டெல்லியில் ஒரு மாத காலத்துக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது, பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் அறிவுறுத்தி உள்ளனர்.

டெல்லி அரசின் கல்வி இயக்குநரகம் மற்றும் மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் பெற்றோருக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்க, வாரியத்தின் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை பிப்ரவரி 26 ஆம் தேதி டெல்லியின் வடகிழக்கு பகுதியில் ஒத்திவைக்க வாரியம் முடிவு செய்துள்ளது.

இந்தநிலையில், கலவரத்தைக் கட்டுப்படுத்த டெல்லி காவல்துறை சிறப்பு ஆணையராக ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில், வன்முறையாளர்களைக் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் பரவின. பின்னர், அந்த தகவலை வடகிழக்கு டெல்லிக்கு காவல்துறையினர் மறுத்துள்ளனர்.

இதுவரை வன்முறையில் 13 பேர் பலியாகியுள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://newstamil.in/