தனுஷ் – கார்த்திக் சுப்புராஜ் ‘ஜகமே தந்திரம்’ பட மோஷன் போஸ்டர் ரிலீஸ்

பேட்ட படத்தை அடுத்து தனுஷின் 40-வது படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். இந்த படத்திற்கு ஜகமே தந்திரம் என்று தான் பெயர் வைத்துள்ளனர். மேலும் லண்டனில் படமாக்கப்பட்டுள்ள ஜகமே தந்திரம் மே 1ம் தேதி ரிலீஸ் என்றும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். லண்டனில் துவங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட இடங்களிலும் நடைபெற்றது.

படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்ட நிலையில் தற்போது மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஜகமே தந்திரம் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படம் வரும் மே 1-ம் தேதி ரிலீசாகும் என்றும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

படக்குழுவின் இந்த அறிவிப்பை சமூகவலைதளங்களில் ட்ரெண்டாக்கி கொண்டாடி வருகின்றனர் தனுஷ் ரசிகர்கள்.Comments are closed.

https://newstamil.in/