தர்பார் விமர்சனம் | Darbar review
நடிப்பு: ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, யோகி பாபு
தயாரிப்பு: லைகா புரொடக்ஷன்ஸ்
இயக்கம்: ஏ.ஆர்.முருகதாஸ்
வெளியான தேதி – 9 ஜனவரி 2020
நேரம் – 2 மணி நேரம் 40 நிமிடம்
ரேட்டிங் – 3.50/5
தர்பார் விமர்சனம்
Overall
- Critic's Rating
- Avg. Users' Rating
User Review
( vote)விமர்சனம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் திரைப்படம் . முருகதாஸ் இயக்கிய உள்ள இப்படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸாகியுள்ளது.
தர்பார் படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.
தர்பார் படத்தின் முதல் பாதி தீயாக உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மோசமான போலீஸ் ஆக வந்து ஒரு அரசியல் வாதியின் மகளை காப்பாற்றுகிறார். அதுவரை நிதானமாக சென்று கொண்டிருந்த தர்பார் சூடு பிடிக்கிறது. ரஜினி படு சுறுசுறுப்பாக இருக்கிறார்.
அனிருத் இசை சிறப்பு. இதுக்குமேல கெத்தா எவராலும் பிஜிஎம் போட முடியாது. சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு அருமை. செமயான திரைக்கதை.
யோகி பாபு முதல் முறையாக ரஜினியுடன் இணைந்து நடித்திருப்பதால் சும்மா தெறிக்க விட்டுள்ளார், முதல் பாதியில் பல இடங்களில் வந்து செல்கிறார். வரும் போதெல்லாம் நம்மை சிரிக்க வைக்கிறார்.
முதல் பாதியில் நயன்தாரா அழகாக வந்து செல்கிறார், அவருக்கு பெரிய அளவில் ஸ்கோப் இல்லை, ஹீரோயினுக்கு வேலை இல்லாதது தான் ஒரே மைனஸ். இரண்டாம் பாதியில் அவர் பங்கிற்கு பிச்சு உதறுவார் என எதிர்பார்க்கலாம்.
வில்லனாக நடித்துள்ள சுனில் ஷெட்டிக்கும் முதல் பாதியில் பெருசா வேலை இல்ல.
ரஜினி மிகவும் இளமையாக தெரிகிறார். ரஜினி, நயன்தாரா காதல் காட்சிகள் நன்றாக உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த பேட்டை படத்தை விட இந்த படத்தில் இன்னும் மாஸாக வெறித்தனமாக நடித்து ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட் கொடுத்துள்ளார்.
சிவாஜிக்கு பிறகு ரஜினிகாந்துக்கு சிறந்த கமர்ஷியல் படம். முருகதாஸ் இஸ் பேக் என்று சொல்லலாம்.
படக்குழு கூறியபடியே இடைவேளை காட்சி அனல் பறக்கிறது. அனிருத் BGM வேற லெவல். சந்தோஷ் சிவனின் DOP பக்கா மாஸ்.
முருகதாஸ் ஒவ்வொரு காட்சியையும் ரஜினி ரசிகர்களுக்காக பார்த்து பார்த்து செதுக்கியுள்ளார். சும்மா வந்து போகும் நயன்தாரா, வெய்ட் காட்டும் யோகி பாபு, மாஸ் காட்டும் ரஜினி, மொத்தத்தில் தர்பார் ரசிகர்களுக்கு செம என்ஜாய்மென்ட்.
வில்லன் கதாபாத்திரம் இன்னும் மிரட்டலாக அமைந்திருக்கலாம். கிளைமேக்ஸ் இன்னும் கொஞ்சம் அழுத்தமாக இருந்திருக்கலாம்.
போதைப் பொருள் கடத்தல், ஒரு வில்லன், மகள் இழப்பு, அதிரடி போலீஸ் என ஒரு சிறிய வட்டத்திற்குள்ளேயே கதை நகர்கிறது. இதுதான் நடக்கப் போகிறது என யூகிக்கக் கூடிய டெம்ப்ளேட் காட்சிகள் என ஆங்காங்கே சில குறைகள். இருந்தாலும் தன்னுடைய தாறுமாறான ஸ்டைலால் அதையெல்லாம் மறக்க வைக்கிறார் தனி ஒருவன் ரஜினிகாந்த்.
ரஜினி ரஜினி தான், மொத்த படத்தையும் தோலில் தாங்கி செல்கிறார், ரெயில்வே சண்டைக்காட்சி மிரட்டல்.
தர்பார்: ரஜினியின் சாம்ராஜியம்