மகா சிவராத்திரி அஜித் ரசிகர்கள் செய்த காரியம்!

இன்று மகா சிவராத்திரி பண்டிகை நாடு முழுவதும் நாளைய தினம் கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் சிவ ஆலயங்களில் பிரம்மோற்வ விழாக்கள் களைகட்டியுள்ளன.

அஜித்திற்கு சில நாட்களுக்கு முன் சென்னையில் நடந்த படப்பிடிப்பில் அஜித் டூப் இல்லாமல் பைக் ஓட்டும் ரிஸ்க்கான காட்சியில் நடித்தபோது எதிர்பாராதவிதமாக பைக்கில் இருந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும் மருத்துவர்கள் அவரை சில நாட்கள் ஓய்வெடுக்க சொல்லியிருக்கின்றனர். இதனால் பெங்களூரில் உள்ள அவரின் ரசிகர்கள் அஜித் விரைவில் உடல் நலம் பெற்று திரும்ப வேண்டும் என மகா சிவராத்திரி நாளில் சிவ ஆலயத்தில் பூஜை செய்து வழிபாடு நடத்தியுள்ளனர்.

இதே போல தமிழ் நாட்டின் மற்ற பகுதிகளிலும் ரசிகர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.

Image


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *