தோனியின் லேடி சூப்பர் பாடி கார்ட் – யார் இந்த லேடி? வைரல் வீடியோ
2019 ஜூலையில் நடந்த 2019 உலகக் கோப்பைக்குப் பிறகு அவர் எந்த கிரிக்கெட்டையும் விளையாடவில்லை என்றாலும், அவர் மீதான அன்பு குறையவில்லை.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு பெண் ஒருவர் பாதுகாவலராக செயல்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அவர் யார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், அதற்கான விடை தற்போது கிடைத்துள்ளது.
அவர் பெயர் சப்னா பவ்நானி என்பதும் அவர் தோனியின் தனிப்பட்ட சிகையலங்கார நிபுணர் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது. தோனி மட்டுமல்லாமல் பல பாலிவுட் நட்சத்திரங்களுக்கும் சப்னா பவ்நானி சிகையலங்காரம் செய்து வருகிறார்.