சிம்புவின் மாநாடு படத்தின் முதல் காட்சி விடியோ

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படம் பற்றிய அறிவிப்பை 2018-ம் ஆண்டிலேயே வெளியிட்டனர். ஆனால் படத்தில் நடிக்க சிம்பு காலதாமதம் செய்ததாக குற்றம்சாட்டி படத்தை கைவிடுவதாக பட நிறுவனம் அறிவித்தது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று காலை மிக சிறப்பாக பூஜையுடன் துவங்கியது. இப்படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர், பாரதிராஜா, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி பிரியதர்ஷினி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்க உள்ளனர்.

மேலும் நேற்று நடந்த இப்படத்தின் பூஜையில் சிம்பு, இயக்குனர்கள் சீமான், பாரதிராஜா, சேரன், தயாரிப்பாளர்கள் எஸ்.தாணு, டி.சிவா, கே.ராஜன், மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்பின் இப்படத்தின் முதல் ஷாட் எடுக்கப்பட்டது, இதில் கிளப் போர்டு அடித்து படத்தின் முதல் காட்சியை துவக்கி வைத்துள்ளார் இயக்குனர் சேரன்.

இந்நிலையில் தற்போது இந்த வீடியோ ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. முதல்கட்ட படப்பிடிப்பை 30 நாட்கள் நடத்த திட்டமிட்டுள்ளனர்.



Comments are closed.

https://newstamil.in/