கீர்த்தி சுரேஷ் எடையை குறைத்ததால் இந்தி வாய்ப்பை இழந்தார்!
மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம் மகாநடி. இந்த படம் தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மூன்று மொழிகளில் வெளியானது, அவரின் நடிப்பு இந்திய சினிமா முழுவதும் அவரை பிரபலமாக்கியது.
இதன் மூலம் பாலிவுட்டில் நடிகர் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக மைதான் என்கிற ஹிந்திப் படத்தில் நடிக்க இருந்தார்.
தற்போது கீர்த்தி சுரேஷ் உடல் எடையை குறைத்துள்ளதால் இந்த கதைக்கு மிகவும் இளமையாக தெரிவார் என்பதாலும் படக்குழு கீர்த்தி சுரேஷை அதிரடியாக நீக்கி நடிகை ப்ரியாமணி நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இது பற்றி கூறிய ப்ரியாமணி இந்த பட வாய்ப்பு எனக்கு டிசம்பர் மாதம் வந்தது.இயக்குனர் அமித் கூறிய கதை எனக்கு மிகவும் பிடித்துப்போனது எனவே என்னால் இந்த வாய்ப்பை மறுக்க முடியவில்லை என கூறினார்