சமந்தா கர்ப்பம்; படத்தில் இருந்து விலகிட்டாராமே!

நடிகை சமந்தா ‘காத்துவாக்குல ரெண்டு காதல்‘ படத்தில் இருந்து விலகி விட்டதாகக் கூறப்படுகிறது. சமந்தா தமிழ் சினிமாவிலிருந்து தெலுங்கு தேசம் சென்று வெற்றிக்கொடி நாட்டியவர். தமிழில் இவருக்கு கத்தி வரை பெரிய ப்ரேக் ஏதும் கிடைக்கவில்லை.

படங்களில் நன்றாக நடித்தாலும், கத்தி தான் சமந்தாவின் பெரிய கமர்ஷியல் ஹிட், அதை தொடர்ந்து தெறி, மெர்சல் என கலக்கினார்.

தற்போது கூட விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல இரண்டு காதல் என்ற படத்தில் கமிட் ஆனார். இதில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். அவர் ஜோடியாக நயன்தாரா, சமந்தா நடிப்பதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், இந்தப் படத்திலிருந்து சமந்தா விலகிவிட்டதாக ஒரு செய்தி வந்தது, அதை ஒரு பிரபல பத்திரிகையாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆம், சமந்தா இந்த படத்திலிருந்து விலகிவிட்டார், இதற்கு காரணம் அவர் கர்ப்பமாக உள்ளார் என்பதால் தான் என அவர் தெரிவித்துள்ளார்.



Comments are closed.

https://newstamil.in/