Thursday, September 10, 2026
ENTERTAINMENTLatest

நடிகர் சரத்குமாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்துவிட்டது போல் தோன்றினாலும் நாளுக்கு நாள் அதனால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அப்படியே தான் இருக்கிறது.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக ஐதராபாத் சென்ற சரத்குமாருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு அவருக்கு சில அறிகுறிகள் தென்படவே பரிசோதனை மேற்கொண்டுள்ளார்.

இன்று வந்த சோதனை முடிவுகளின் படி அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சரத்குமாரின் மனைவியும், பிரபல நடிகையுமான ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அவர், இன்று சரத்திற்கு ஐதராபாத்தில் கொரோனா பாசிட்டிவ் என வந்துள்ளது. அவர் நல்ல உடல் நலத்துடனும், சிறப்பான மருத்துவர்களின் சிகிச்சையிலும் இருக்கிறார்.

அடுத்த நாட்களில் அவரது உடல்நிலை குறித்து வரும் தகவல்களை நானே உங்களுக்கு தெரிவிக்கிறேன் என பதிவிட்டுள்ளார். இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் பலரும் அவர் விரைவில் பூரண நலத்துடன் வீடு திரும்ப வேண்டுமென வாழ்த்து கூறி வருகின்றனர்.



Comments are closed.