சிம்புவின் ‘மாநாடு’ படத்தில் இத்தனை நடிகர்களா?

சிலம்பரசன் மாநாடு படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய பின் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இதனை அடுத்தே மாநாடு ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

இந்நிலையில் மாநாடு படத்தில் நடிக்கும் நடிகர்கள் போஸ்டரை படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டு வருகிறார்.

போஸ்டரில் இருக்கும் அப்துல் காலிக் யார்?

11ஆம் நூற்றாண்டில் அப்துல் காலில் என்ற பெயரில் சூஃபி தத்துவவியல் அறிஞர் ஒருவர் வாழ்ந்திருக்கிறார்.

18ஆம் நூற்றாண்டில் எகிப்தில் வாழ்ந்த ஓர் அரசியல்வாதியின் பெயர் அப்துல்காலிக்.

இவற்றையெல்லாம் கடந்து இஸ்லாம் மதத்தை தழுவிய இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா இஸ்லாத்திற்காக அப்துல் காலித் என பெயர்சூட்டிக் கொண்டார். யுவன்சங்கர் ராஜாதான் இந்த திரைப்படத்திற்கும் இசை அமைக்கிறார்.

ஒரு வருட இடைவெளிக்கு பின் சிலம்பரசன் நடிப்பதால் மாநாடு குறித்து பல பதிவுகளை ட்விட்டரில் ஷேர் செய்து வருகின்றனர் அவர் ரசிகர்கள். .

வெங்கட்பிரபு இயக்கும் 9வது படம் இது. அவர் இயக்கிய பார்ட்டி திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை.Comments are closed.

https://newstamil.in/