ரம்யா பாண்டியன் – சூர்யா தயாரிப்பில் நடிக்கிறார்!
கொரோனா காலத்தில் வீட்டிலிருக்கும் நடிகை ரம்யா பாண்டியன் தனது ரசிகர்களுடன் சமூகவலைதள பக்கத்தில் உரையாடினார். அப்போது அவர் நடிக்க இருக்கும் புதிய இடங்கள் குறித்த கேள்வியை ரசிகர்கள் எழுப்பினர்.
ஜோக்கர் படம் மூலமாக அறிமுகமான ரம்யா பாண்டியனுக்குத் தற்போது பெரிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
ரசிகர்களுடனான உரையாடலில் இத்தகவலை அவர் வெளியிட்டுள்ளார். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் மற்றும் சிவி குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் நடிக்கவுள்ளதாக ரம்யா பாண்டியன் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் குஷியடைந்துள்ளனர்.