கல்லூரி மாணவியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த நடிகர் மகன் கைது!

குளிர்பானத்தில் கல்லூரி மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக, முன்னாள் வில்லன் நடிகரின் மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நடிகர் பாக்யராஜ், சுலக்சனா நடித்த தூரல் நின்னு போச்சு படம் மூலம் குணச்சித்திர நடிகராகவும், வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தவர் நடிகர் சூர்ய பிரகாஷ். பல்வேறு தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தற்போது அதிமுகவில் பேச்சாளராக வலம் வருகிறார். இவரது மகன் விஜய் ஹரிஷ். இவரும் ‘நாங்களும் நல்லவங்கதான்’ ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

விஜய் ஹரிஷ் ஒரு கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவியுடன் பழக்கத்தில் இருந்து வந்துள்ளார். இதை தொடர்ந்து விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கல்லூரி மாணவியை அழைத்துச் சென்று குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதை வீடியோவாக எடுத்து வைத்துகொண்டு என் ஆசைக்கு இணங்கவில்லை என்றால் பேஸ்புக்கில் போடுவதாக மிரட்டி பல முறை உடலுறவு கொண்டுள்ளார்.

இதை தொடர்ந்து மேலும் மிரட்டி வருவதால் மாணவி வண்ணாரப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் போலீசார் நடிகர் விஜய் ஹரிஷை கைது செய்து 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


293 thoughts on “கல்லூரி மாணவியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த நடிகர் மகன் கைது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://newstamil.in/