ரஜினிகாந்த் கட்சி பெயர், கொடியையும் ஏப்ரல் மாதம் அறிவிப்பு?

நடிகர் ரஜினி, அடுத்த மாதம், கட்சி பெயரை அறிவிக்க உள்ளார் , வரும் ஏப்ரல் 14ம் தேதி கட்சியின் பெயரையும், கொடியையும் அறிவிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான முன்னேற்பாடுகளில், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ஈடுபட்டு உள்ளனர்.

திரைமறைவில், கூட்டணி குறித்தும், துாதர்கள் வாயிலாக, பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசுக்கு ஆதரவாக பேசி வந்த ரஜினி, ‘டில்லியில் நடந்த வன்முறைக்கு, மத்திய உள்துறை அமைச்சகமும், உளவுத்துறை தோல்வியும் தான் காரணம்’ என, காட்டமாக பேட்டி அளித்தார்.

இந்நிலையில் ரஜினி சத்தமில்லாமல் தனது மன்ற நிர்வாகிகளை அவ்வப்போது அழைத்து ஆலோசனை நடத்தி வந்தார். அரசியல் கட்சி பெயரை அறிவிப்பதற்கான முதற்கட்ட பணிளை, ரஜினி துவக்கி உள்ளார்.

இதன் ஒரு பகுதியாக, சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள, ராகவேந்திரா மண்டபத்தில், நாளை காலை, 10:00 மணிக்கு, ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலர்கள் கூட்டத்தை கூட்டி, அவர் ஆலோசிக்க உள்ளார். இதைத் தொடர்ந்து, கட்சி அறிவிப்புக்கான செயல்பாடுகள் வேகம் எடுக்கும் என, தெரிகிறது.

மேலும் வரும் ஏப்ரல்14ம் தேதி கட்சிக்கொடியையும் கட்சியின் பெயரையும் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.


72 thoughts on “ரஜினிகாந்த் கட்சி பெயர், கொடியையும் ஏப்ரல் மாதம் அறிவிப்பு?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://newstamil.in/