ஐ.பி.எல் போட்டிகள் நடக்குமா? பீதியை கிளப்பும் கொரோனா?

ஐ.பி.எல். 2020 – 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது. கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவுவதால் இந்த போட்டி தள்ளி வைக்கப்படலாம் என்ற சந்தேகம் கிளம்பி இருக்கிறது.

கொரோனோ வைரஸ் பாதிப்பும், அச்சமும் பொதுமக்கள் மத்தியில் அதிகமாக பரவக்கூடிய சூழ்நிலையில், ஐ.பி.எல் போட்டி நடக்குமா இல்லை ஒத்திவைக்கப்படுமா என்ற கேள்வி ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் எதிரொழித்துக்கொண்டிருக்கிறது. கிரிக்கெட் வல்லுநர்கள், ரசிகர்கள், என்ன சொல்கிறார்கள்?

மராட்டிய மாநில சுகாதார துறை மந்திரி ராஜேஷ் டோப் அளித்த ஒரு பேட்டியில், ‘மக்கள் ஒரு இடத்தில் அதிக அளவில் கூடும் போது அங்கு ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருந்தாலும் அது வேகமாக மற்றவர்களுக்கு பரவுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

எனவே சிறிது காலத்துக்கு மக்கள் கூடும் நிகழ்ச்சிகள் நடத்துவதை தவிர்க்க வேண்டும். எனவே ஐ.பி.எல். போட்டியை தள்ளி வைக்கலாமா? என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது’ என்று கூறியிருந்தார்.

மேலும், போட்டி நடைபெறுவதற்கான வாய்ப்புகளே அதிகமாக இருப்பதாகவும், ஒருவேளை இனிவரும் நாட்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் பட்சத்தில் ரசிகர்களை மைதானத்தில் அனுமதிக்காமல் வீரர்கள், நடுவர்கள், தொலைக்காட்சியில் ஒளிபரப்பகூடியவர்களைவைத்து போட்டி நடத்தப்படும் என விளக்குகிறார் மருத்துவரும் கிரிக்கெட் விமர்சகருமான சுமந்த் சி ராமன்.

இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலியிடம் கேட்ட போது, அவர் கூறுகையில், ‘ஐ.பி.எல். போட்டியை தள்ளி வைக்கும் எண்ணம் எதுவுமில்லை. போட்டி திட்டமிட்டபடி நடைபெறும். இந்த போட்டியுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினருக்கும் போட்டிக்கு முன்னதாகவும், போட்டியின் போதும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் உறுதி அளித்துள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை இந்திய கிரிக்கெட் வாரியம் தீவிரமாக மேற்கொள்ளும்’ என்றார்

சீனாவில் உருவான கொரோனோ வைரஸ் ஒட்டுமொத்த உலகத்தையே கதிகலங்க வைத்துள்ளது. இந்தியாவில் மட்டும் இதுவரை 40க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் யாரும் பொதுஇடங்களில் கூடவேண்டாம் எனவும் எச்சரிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் வரும் 29ம் தேதி தொடங்கும் ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறுமா என ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கிவிட்டனர்.

ஐ.பி.எல் போட்டி நடைபெறுவது உறுதியானாலும், தொலைக்காட்சியில் அமர்ந்து போட்டியை ரசிப்பதை விட மைதானத்திற்கு சென்று கண்டுகளிப்பதுதான் சிறப்பானதாக இருக்கமுடியும் என ஆதங்கப்படுகின்றனர் ரசிகர்கள் . அத்துடன் தோனியை கண்டால் கொரோனாவே அச்சம்கொள்ளும் எனவும் நம்பிக்கை அளிக்கின்றனர்.

மாநில அமைச்சர் தள்ளி வைக்கலாமா? என்று ஆலோசனை ச்ய்கிறோம் என்கிறார், ஆனால் கங்குலி தள்ளி வைக்கும் எண்ணம் இல்லை என்கிறார். இப்படி இருவேறு கருத்துகள் வந்திருப்பதால் குழப்பம் நீடிக்கிறது.


79 thoughts on “ஐ.பி.எல் போட்டிகள் நடக்குமா? பீதியை கிளப்பும் கொரோனா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://newstamil.in/