விக்ரமின் ‘கோப்ரா’ மோஷன் போஸ்டர்
விக்ரம் நடிப்பில் கடந்த வருடம் ஸ்கெட்ச், சாமி-2 படங்களும் கடந்த ஜூலை மாதம் கடாரம் கொண்டான் படமும் திரைக்கு வந்தன. கடாரம் கொண்டான் படத்தை கமல்ஹாசன் தயாரித்து இருந்தார். தொடர்ந்து கமலின் கனவு படமான மருதநாயகம் படத்தில் விக்ரம் நடிப்பார் என்றும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. கவுதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்துள்ளார்.
தற்போது டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களை இயக்கி பிரபலமான அஜய் ஞானமுத்து இயக்கும் புதிய படத்திற்கு ‘கோப்ரா’ என்று பெயர் வைத்துள்ளார். விக்ரம் நடிப்பில் இந்த படம் உருவாக இருக்கிறது இது அவருக்கு 58-வது படம்.
இந்த படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.
Comments are closed.