‘ஜான்சன் அண்ட் ஜான்சன்’ நிறுவனத்துக்கு ரூ.230 கோடி அபராதம்

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் குழந்தைகளுக்கான சோப்பு , பவுடர் உள்ளிட்ட பொருட்கள் குறித்து பல சர்ச்சைகள் எழுந்தது.

இந்நிலையில் ஜி.எஸ்.டி., வசூலில் முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பதாக ‘ஜான்சன் அண்ட் ஜான்சன்’ நிறுவனத்துக்கு ரூ.230 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி., வரிவிகிதத்தில் கொண்டு வரப்பட்ட மாற்றங்களை நுகர்வோருக்கு கடத்தாமல், ‘ஜான்சன் அண்ட் ஜான்சன்’ நிறுவனம் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த நவ.,15, 2017 முதல், அந்நிறுவனத்தின் சில தயாரிப்புகளுக்கான ஜி.எஸ்.டி., வரி, 28 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டிருந்தது.

ஆனால், இந்த ஜி.எஸ்.டி விகிதக்குறைப்பின் பலனை நுகர்வோருக்குக் கடத்தாமல் மோசடி செய்ததை என்.ஏ.ஏ.,(National Anti-profiteering Authority) அமைப்பு கண்டுபிடித்தது. இதனையடுத்து ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு, ரூ.230 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்ற குற்றச்சாட்டுக்காக நெஸ்லே இந்தியா நிறுவனத்துக்கு, இம்மாத துவக்கத்தில், ரூ.90 கோடி அபராதம் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



Comments are closed.

https://newstamil.in/