ரஜினி புன்னகை மன்னன் வெற்றி விழாவில் கமலை பற்றி பேசிய அறிய வீடியோ!

கவிதாலயா புரடெக்ஷன்ஸ் தயாரித்த படம் ‘புன்னகை மன்னன்‘. இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கத்தில், இளையராஜா இசையில் உருவான இந்த படம் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது,

தற்போது இப்படத்தின் வெற்றிவிழா நிகழ்ச்சியில் ரஜினி பேசி இருந்ததை இதுவரை நாம் யாரும் பார்த்திருக்க மாட்டோம்.

ரஜினிகாந்த் உலக நாயகனை பற்றி பேசும் போது புகழ்ந்து தள்ளியுள்ளார். அதில் அவர் “கமல் நடிகர்களுக்கெல்லாம் நடிகர். புன்னகை மன்னன் வெற்றி பெற்றதற்கு பின்னால் இருக்கும் முதல் காரணம் பாலச்சந்தர் அவருடைய இயக்கம் இரண்டாவது பெரிய காரணம் நடிகர் கமலின் அசாத்திய நடிப்பு தான்.

புன்னகை மன்னன் படத்தை சென்சார் போர்ட்டில் கடித்து குதறினர் அதற்குப் பின்னும் படம் இவ்வளவு பெரிய வெற்றி அடைந்துள்ளது என்றால் அதற்கு காரணம் கமல் மட்டும்தான்.

அவர் நடித்த ‘சாப்ளின் செல்லப்பா’ கதாபாத்திரத்தை வேறு யாராலும் நடிக்க முடியாது, ஏன் யூகித்து கூட பார்க்க முடியாது. ஒரு சில திரைப்படங்கள் இரண்டு வாரத்துக்கு ஓடும் என்று நினைப்போம், ஆனால் 25 வாரத்துக்கு ஓடும். எல்லாம் ரசிகர்கள் கையில்தான் இருக்கிறது”

என்று அவர் பேசும்போது அவையில் மக்கள் ஆரவாரம் செய்கின்றனர் இந்த வீடியோ மீண்டும் கமல் ரஜினி நட்பிற்கும் பெருந்தன்மைக்கும் ஒரு சிறந்த உதாரணம்.



Comments are closed.

https://newstamil.in/