உதயநிதி ஸ்டாலின் கைது – குடியுரிமை சட்ட நகலை கிழித்து போராட்டம்

சென்னையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவின் நகலை கிழித்து போராட்டத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுக்க போராட்டம் நடந்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் எதிர்கட்சித் தலைவர்கள் தீவிரமாக போராட்டம் நடத்தி வருகிறது. தமிழகம் முழுக்க திமுகவினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சைதாப்பேட்டை கலைஞர் வளைவு அருகே உதயநிதி பேரணியாக சென்ற போது முக்கிய நிர்வாகிகள் மேடையில் ஏறி அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர்.

‘கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம். குடியுரிமை மசோதாவை கண்டிக்கிறோம்’, ‘காப்பாற்று, காப்பாற்று இலங்கை அகதிகளை காப்பாற்று’, ‘இலங்கை அகதிகளை திருப்பி அனுப்பாதே’, ‘திரும்ப பெறு, திரும்ப பெறு, குடியுரிமை திருத்த மசோதாவை திரும்ப பெறு’ என மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

Udhayanidhi Stalin Arrested

இதில் சட்ட நகலை எதிர்த்து திமுகவின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போராட்டம் செய்தார். 2000 திமுகவினர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தில் உதயநிதி ஏந்தி நின்ற கட்சிக்கொடியை பார்க்கும் போது, ஒட்டுமொத்த திமுகவையும் தாங்கி…Comments are closed.

https://newstamil.in/