டிரம்ப் ‘வா, முத்தமிடலாம்’ என்று அழைத்தார்: பெண் நிருபர் பரபரப்பு புகார்

டிரம்ப் என்னை முத்தமிட அழைத்தார் என்ற புகழ்பெற்ற ‘பாக்ஸ் நியூஸ்’ டி.வி. சேனலில் நிருபராக இருந்த கர்ட்னி பிரையலின் புகாரால் அமெரிக்கா அதிர்ந்து போய் உள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு டொனால்டு டிரம்ப், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோதே, அவர் மீது பல பாலியல் புகார்கள் எழுந்தன. அதனை அவர் மறுத்தும் வந்தார்.

ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் தொடங்கி பல தரப்பிலான பெண்கள் அவர் மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்களை பெண்கள் கூறினர்.

இந்நிலையில் அமெரிக்காவின் கே.டி.எல்.ஏ வானொலியில் பணியாற்றி வருகிற பெண் நிரூபர் கர்ட்னி ஃப்ரீல், ’டூநைட் அட் 10; கிக்கிங் பூஸ் அண்டு பிரேக்கிங்” என்று ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்.

அந்த புத்தகத்தில் அவருடைய அனுபவங்கள் பலவற்றை பதிவு செய்துள்ளார். அதில், ”அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், பதவிக்கு வருவதற்கு முன்பு ஒரு அழகி போட்டி நடத்தினார். அதில் நடுவராக இருக்க விரும்பினேன். இது குறித்து டிரம்ப் தரப்பில் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டனர். அப்போது இன்னொரு டி.வி.நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டு, அழகிப்போட்டியில் நடுவராக இருக்க முடியாது என்று டிரம்ப் மறுத்தார். அதன் பின்பு தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு நாள் என் அலுவலகத்திற்கு வா, முத்தமிடலாம் என்று அழைத்தார். அதை கேட்டு அதிர்ந்து போய், தொலைப்பேசியை துண்டித்து விட்டேன்” என குறிப்பிட்டுள்ளார்.

இதில் குறிப்பிட்டுள்ள சம்பவம், கட்னி ஃப்ரீல் ”ஃபாக்ஸ் நியூஸ்” டிவி சேன்னலில் வேலை பார்த்துக்கொண்டிருந்த போது நடந்தது என குறிப்பிட்டுள்ளார். இந்த புத்தகம் இந்த வாரம் வெளியாகவுள்ளது.

மேலும் டிரம்ப் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது, அது தொடர்பான செய்திகளை சேகரித்து வெளியிடுவது எனக்கு கடினமாக அமைந்தது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இது தொடர்பாக டிரம்ப் தரப்பில் எந்த கருத்தும் உடனடியாக வெளியிடவில்லை.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நெறுங்கிக்கொண்டிருக்கும் நிலையில், டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். இச்சமயத்தில் டிரம்ப்பின் மீது பாலியல் புகார் புதிதாக எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://newstamil.in/