Thursday, September 10, 2026
ENTERTAINMENTLatest

ஆல்யா மானசா வளைகாப்பு – வீடியோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா-ராணி சீரியல் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் அந்த சீரியல் முடிந்தது. இந்த சீரியலில் செம்பா-கார்த்திக் வேடத்தில் நடித்ததன் மூலம் ஆல்யா மானசா-சஞ்சீவ் இருவரும் நிஜ காதலர்களாக மாறினர்.

அந்த சீரியலில் நடிக்கும் போதே இருவருக்குமிடையே காதல் தீ பற்றிக்கொண்டதாக கூறப்பட்டது. அதையடுத்து இருவரும் உருகி, உருகி நடித்து வெளியிட்ட டிக்டாக், டப்ஸ்மாஷ் வீடியோக்கள் உண்மையை வெளிக்கொண்டு வந்தது.

இதையடுத்து இருவருக்கும் ஒரு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நிச்சயதார்த்தமும் நடத்தப்பட்டது. இதையடுத்து கடந்த மே மாதம் பெற்றோர்களை எதிர்த்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சின்னத்திரையில் பிரபலமான இந்த காதல் ஜோடிக்கு அடுத்த பரிசு கிடைத்தது.

இதையடுத்து சில மாதங்களுக்கு முன் ஆல்யா மானசா கர்பமாக இருப்பதாக சஞ்சீவ் அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது முறைப்படி ஆல்யாவிற்கு வளைகாப்பு நடத்தியுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் உலா வர அனைவரும் இந்த காதல் தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் ஆல்யா மானசாவின் வளைகாப்பு புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் குழந்தை நல்ல படியாக பிறக்க வேண்டுமென வாழ்த்து கூறி வருகின்றனர்.

மேலும் தனது தாயின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்த மானசா, அவரது தந்தை மட்டுமே மகளுடன் சமாதானமானார். குழந்தை பிறந்ததும் முதலில் தாய் கையில்தான் கொடுக்க ஆசைப்படுகிறேன் என கூறியிருந்தார் ஆல்யா.

இந்நிலையில், மகள் மீதான கோபம் தனிந்து வளைகாப்பு நிகழ்ச்சியை கோலாகலமாக நடத்தியுள்ளார் அவரது தாய். இதன்காரணமாக மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் சின்னத்திரை ஜோடியான ஆல்யா – சஞ்சீவ்.


Comments are closed.