வனிதா திருமணம் மீண்டும் சிக்கலில்; பீட்டர் பாலின் மனைவி போலீசில் புகார்
வனிதா விஜயகுமார் – பீட்டர் பால் திருமணம் நேற்று நடந்து முடிந்த நிலையில், பீட்டர் பாலின் முன்னாள் மனைவி ஹெலன், பீட்டர் பால் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
வனிதாவுக்கும் – பீட்டர் பாலுக்கும் கிறிஸ்தவ முறைப்படி நேற்று திருமணம் நடந்து முடிந்தது. இவர்களது திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அவர் புகார் மனுவில், தன்னை விவாகரத்து செய்யாமல் பீட்டர் பால் இன்னொரு கல்யாணம் செய்து கொண்டதாகவும், தங்களுக்கு 2 குழந்தைகள் இருப்பதாகவும் கூறியிருக்கிறார். மேலும் பீட்டர் பாலும், தானும் கடந்த 7 வருடங்களாக பிரிந்து வாழ்வதாகவும் அவர் மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.
ஹெலனின் இந்த மனுவை தொடர்ந்து பீட்டர் பால் – வனிதா திருமண அறிவிப்பு வெளியான உடனேயே புகார் அளித்திருக்கலாமே என்று சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து வனிதா தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லை.
Comments are closed.