தமிழகத்தில் வாகனங்கள் நுழைய தடை; நாளை முதல் மார்ச் 31 வரை!
நாளை முதல் மார்ச் 31-ம் தேதி தமிழகத்தில் தமிழக எல்லைப் பகுதிகள் மூடப்படுகின்றன என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அத்தியாவசிய வாகனங்களுக்கு மட்டும் அனுமதியளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 22-ம் தேதி ஊரடங்கை பின்பற்றுமாறும், வீட்டைவிட்டு யாரும் வெளியே வரவேண்டாம் என பிரதமர் மோடி நேற்று டி.வி. வாயிலாக அறிவுறுத்தினார்.
இந்நிலையில் இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் நடந்தது. இதையடுத்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில், கொரோனா வைரஸ் எதிரொலியாக, தடுக்கும் பொருட்டு, நாளை முதல் தமிழகத்தில் உள்ள கேரள, ஆந்திர , கர்நாடகா எல்லைகள் மூடப்படும்.
இந்த மாநிலங்களிலிருந்து வரும் சரக்கு வாகனங்கள் வரும் 31-ம் தேதி வரை தமிழகத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.