முன்னாள் அதிமுக எம்.பி., கே.சி.பழனிசாமி கைது
அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., கே.சி.பழனிசாமியை, கோவையில் இன்று போலீசார் கைது செய்யப்பட்டார். அதிமுகவின் செய்தித் தொடர்பாளராக இருந்தவர் முன்னாள் எம்பி கேசி பழனிச்சாமி.
இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு அளிப்போம் என்று அ.தி.மு.கவின் முன்னாள் எம்.பி., கே.சி.பழனிசாமி தெரிவித்திருந்தார்.
இதனால் பாஜகவிற்கு எதிராக பேசியதால் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டது, இதனையடுத்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம் அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாக அ.தி.மு.க அறிவிப்பு வெளியிட்டது. இவர் இரட்டை இலை சின்னம் தொடர்பாகவும் வழக்கு தொடர்ந்தார். சசிகலாவை கடுமையாக எதிர்த்தார்.
இந்நிலையில் இன்று அதிகாலை கோவையில் உள்ள கே.சி.பழனிசாமியின் வீட்டிற்குள் நுழைந்த போலீசார், விசாரணைக்கு பின் அவரை கைது செய்தனர். மேல் விசாரணைக்காக அவர் சூலூர் காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டார்.
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பழனிசாமி தான் பயன்படுத்தும் லெட்டர்பேடிலும் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. அதிமுக பெயரில் போலி இணையதளம் நடத்தி வந்ததால் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments are closed.