விஜய் மாஸ்டர் பர்ஸ்ட் லுக்கில் – இத்தனை விஷயமா?
விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் பர்ஸ்ட் லுக்கில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள் குறித்த விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
மாஸ்டர் படத்தின் கதை முழுக்க முழுக்க விஜயை மட்டும் சுற்றி சுழலும் கதை என்று கூறுகிறார்கள். அதனால் இந்த படத்திற்கு மாஸ்டர் என்று பெயர் வைத்துள்ளனர். விஜய்தான் மாஸ்டர் போல எல்லோரையும் ஆட்டி படைப்பார்.
படம் முழுக்க விஜய் ஆடும் கேம்தான் கதை என்று கூறுகிறார்கள். அதனால்தான் போஸ்டரில் விஜய் கையில் வளையம் வைத்து எல்லோரையும் சுற்ற விடுவார் என்று கூறுகிறார்கள். அதாவது இவர் மாஸ்டர் போல எல்லோரையும் ஆட வைத்து வேடிக்கை பார்ப்பார் என்று படக்குழு கூறுகிறது.
படத்தின் போஸ்டர் 3டி வடிவில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. படத்தில் விஜய், விஜய் சேதுபதி கைதி புகழ் அர்ஜுன் தாஸ் ஆகியோர் இடையே நடக்கும் முக்கோண கதை என்பதை உணர்த்தி உள்ளனர். மாநகரம், கைதி படம் போல் இந்த கதையும் விறுவிறுப்பாக செல்லும் என்கிறார்கள்.