நடிகை பத்மஜா தற்கொலை காரணம் என்ன?
பத்மஜா என்ற துணை நடிகை திருவொற்றியூர், காலடிப்பேட்டையில் வசித்து வந்தார்.பத்மஜா பவன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பத்மஜாவிற்கு 2 வயதில் மகன் இருக்கிறான். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் பவன் ஆந்திரா சென்றுவிட்டார்.
பத்மஜாவின் உறவினர் குழந்தையை தூக்கிச் சென்றுவிட்டனர்.இதையடுத்து திருவொற்றியூறில் உறவுக்கார வாலிபருடன் வசித்து வந்துள்ளார் பத்மஜா.கணவர் இல்லாமல் வீட்டில் இருக்க வேண்டாம் என்றும் வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்யுமாறும் கூறியுள்ளார்.
இந்நிலையில் பத்மஜா தற்கொலை செய்வதற்கு முன் ஒரு வீடியோவை பெங்களூரில் உள்ள தனது சகோதரிக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி உள்ளார். அதில் அவர் கண்ணீர் விட்டு கதறியபடி தற்கொலை செய்துகொள்ளப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் பத்மஜா, வெகுநேரம் ஆகியும் வீட்டின் கதவை திறக்காததால் சந்தேங்கத்தில் ஜன்னல் வழியாக எட்டி பார்த்துள்ளார்.அப்போது பத்மஜா மின் விசிறியில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.
உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து பத்மஜாவின் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக, ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.