சுங்கக்கட்டணம் நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ரத்து

மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுகளின்படி, நிலவும் சூழ்நிலைகளுக்கு தகுந்தவாறு நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளுமாறு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு மத்திய சாலைகள் போக்குவரத்துத் துறை பதிலளித்துள்ளதுm, ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் வரையில் நாடு முழுவதும் டோல் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய போக்குவரத்து தவிர அனைத்து போக்குவரத்தும் முற்றிலும் துண்டிக்கப்பட்டன. இந்த நிலையில், அனைத்து டோல் கட்டணங்களையும் ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அதன்படி, மார்ச் 25 முதல் 21 நாட்களுக்கு (ஏப்ரல் 14 வரை) நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அமலுக்கு வந்தது. இதனையடுத்து, ஒவ்வொரு மாநிலம் மற்றும் மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டன.


83 thoughts on “சுங்கக்கட்டணம் நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ரத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://newstamil.in/