வலிமை படப்பிடிப்பில் அஜித்திற்கு ஏற்பட்ட விபத்து – சோகத்தில் ரசிகர்கள்
தல அஜித் வலிமை படப்பிடிப்பின் போது காயம் அடைந்ததால் ரசிகர்கள் விரைவாக குணமடைய விரும்புகிறார்கள் டுவிட்டரில் #GetwellsoonThala என்ற ஹாஷ்டகை பயன்படுத்தி ட்ரென்ட் செய்து வருகிறார்கள்.
எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் உண்டாக்கி இருக்கும் படம் வலிமை. இப்படத்தில் அஜித் அவர்கள் நீண்ட நாட்கள் கழித்து ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறாராம்.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு பைக் ஸ்டண்ட் காட்சியில் நடித்து கொண்டிருக்கும் பொழுது வாகனத்தில் இருந்து அஜித் கீழே விழுந்து விட்டதாக தெரிவிக்கின்றனர். ஆனால் அந்த காயத்தை கூட பொருட்படுத்தாமல் உடனடியாக ஷூட்டிங்கில் நடிக்க துவங்கினாராம் அஜித் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.