ஊரடங்கை ஏப்.,14க்கு பின் நீட்டிக்கும் திட்டமில்லை: மத்திய அரசு

புதுடில்லி: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்ற செய்திகளை மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜிவ் கவுபா திங்கள்கிழமை நிராகரிப்பு செய்தார்.

இந்த உத்தரவு வரும் ஏப்., 14 வரை அமலில் இருக்கும். ஆனால், இந்த ஊரடங்கு உத்தரவு அதற்கு பிறகும் நீட்டிக்கப்படும் என சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவ துவங்கியது.

ஆனால், இதனை மறுத்துள்ள மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜிவ் கவுபா கூறியதாவது: ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என வெளியாகும் தகவல்கள் ஆச்சர்யத்தை அளிக்கிறது. ஊரடங்கை நீட்டிக்கும் எந்த திட்டமும் மத்திய அரசிடம் இல்லை என தெரிவித்துள்ளார்.



Comments are closed.

https://newstamil.in/