விஜய் தளபதி64 டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு

விஜய் நடிக்கும் தளபதி64 படம் குறித்த முக்கிய அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

தளபதி64 டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வரும் என்றுதான் விஜய்யின் ரசிகர்கள் அதிகம் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் அது பற்றி படக்குழு தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சற்றுமுன் வந்த அறிவிப்பில் தளபதி64 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 31 டிசம்பர் மாலை 5 மணிக்கு அன்று வெளிவரும் என்று அறிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்பை விஜய் ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர். #Thalapathy64update என்ற ஹாஸ்டேக் தற்போது தேசிய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதியும், ஜோடியாக மாளவிகா மேனனும் நடிக்கின்றனர். இவர்களுடன் ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, ஸ்ரீமன், சஞ்சீவ், விஜே ரம்யா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.



Comments are closed.

https://newstamil.in/