ஏடிஎம்.,களில் பணம் எடுக்க 3 மாதத்திற்கு கட்டணமில்லை
பிற வங்கி ஏடிஎம்களில் இருந்து பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான கட்டணமில்லை, ஜூன் 30 வரை குறைந்தபட்ச இருப்பு தேவை இல்லை.
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் கொண்டுவரப்பட்ட பொருளாதார சீர்கேட்டை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கைகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தபோது, ஜூன் 30 வரை வங்கிகளால் குறைந்தபட்ச இருப்பு கட்டணம் வசூலிக்கப்படாது என்று கூறினார்.
அதாவுது ஜூன் 30 வரை அடுத்த மூன்று மாதங்களுக்கு வைப்புத்தொகையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச நிலுவைத் தொகையை பராமரிக்க தேவையில்லை.
மேலும் நிதியமைச்சர் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான ஜிஎஸ்டி அறிக்கையை ஜூன் 30 வரை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை நீட்டிப்பு செய்வதாக கூறினார்.