‘மாஸ்டர்’ விஜய்க்கு 80 கோடி சம்பளம் – வருமான வரித்துறை
விஜய் வீட்டிற்கு தளபதி விஜய் இவரை சுற்றி கடந்த சில வருடங்களாக ஏதாவது ஒரு அரசியல் சர்ச்சை இருந்துக்கொண்டே தான் உள்ளது.
இந்த நிலையில், பனையூரில் உள்ள நடிகர் விஜயின் பங்களாவிற்கு இன்று காலை 3 வாகனங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சென்றனர். சீலிடப்பட்ட அறை, லாக்கர்களைத் திறந்த அதிகாரிகள், சில முக்கிய ஆவணங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.
தற்போது விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு அனைத்துமே முடிந்தது,
மேலும் விஜய்யின் சம்பள விவரத்தையும் வருமான வரித்துறையினர் வெளியிட்டுள்ளனர். நடிகர் விஜய்க்கு பிகில் படத்திற்கு 50 கோடி ரூபாயும், மாஸ்டர் படத்திற்கு 80 கோடி ரூபாயும் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது. விஜய் முறையாக வருமான வரி செலுத்தியுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.