முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை 5 மணிக்கு உரையாற்றுகிறார்

ஊரடங்கு, எடப்பாடி பழனிசாமி, கொரோனா வைரஸ்,

தமிழகத்தில் ஊரடங்கு நாளை மறுதினத்துடன் முடிவுக்கு வர உள்ள நிலையில், இன்று மாலை 5 மணிக்கு முதல்வர், மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனாவால் 2,27,688 பேர் பாதிக்கப்பட்டு 3,659 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இன்னும் இரண்டு நாட்களில் ஊரடங்கு முடிவுக்கு வர இருக்கிறது. தற்போது, சென்னையில் பாதிப்பு குறைந்து மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பு மற்றும் கொரோனா பாதிப்பு நிலை குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார்.

மதுரை, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வரும் சூழலில் அதற்கான தடுப்புப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதேபோல் பொது போக்குவரத்தை மீண்டும் தொடங்குவது உள்ளிட்ட தளர்வுகள் வழங்குவது குறித்தும் ஆட்சியர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

ஏற்கனவே சென்னையைத் தவிர மீதமுள்ள பகுதிகளை 8 மண்டலங்களாகப் பிரித்து போக்குவரத்து தொடங்கப்பட்டதும், கொரோனா அதிகரித்ததும் மீண்டும் தடை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.Comments are closed.

https://newstamil.in/