விஸ்வாசம் பார்த்துவிட்டு விஜய் கண்ணீர்; விஸ்வாசம் படத்திற்கு விருது!
தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் அஜித் குமார். சினிமா உலகில் தன்னுடைய விடா முயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் நடிகர் அஜித் விடா இந்த அளவிற்கு உயர்ந்து நிற்கிறார்.
சென்ற வருடம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆன படம் விஸ்வாசம். இந்த படம் குடும்ப ரசிகர்களை அதிக அளவில் ஈர்த்தது. சுமார் ரூ 140 கோடி வரை இப்படம் வசூல் செய்து விநியோகஸ்தர்களுக்கு மிகப்பெரும் லாபத்தை கொடுத்தது. இந்நிலையில் அந்த படத்திற்கு அதிக விருதுகள் கிடைத்துவருகிறது.
தற்போது விகடன் விருது விழாவில் சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக விஸ்வாசம் தேர்வானது. அந்த விருதை இயக்குனர் சிவாவுக்கு நடிகர் விஜய்யின் அப்பா எஸ்ஏ சந்திரசேகர் வழங்கினார்.
அப்போது மேடையில் பேசிய அவர் ‘விஜய் விஸ்வாசம் பார்த்துவிட்டு உடனே அஜித்துக்கு கால் செய்து வாழ்த்தினார்’ என தெரிவித்துள்ளார். மேலும் விஸ்வாசம் படத்தை பார்த்துவிட்டு கண்ணீரை நிறுத்த முடியவில்லை எனவும் கூறியுள்ளார் அவர்.
Comments are closed.