அமேசான் நிறுவனர் பெண் தோழிக்காக ரூ.1,178 கோடிக்கு பங்களா வாங்கியுள்ளார்

அமேசான் நிறுவனரான ஜெஃப் பெஜோஸ் Jeff Bezos தனது பெண் தோழிக்காக இந்திய மதிப்பில் ஆயிரத்து 178 கோடி ரூபாய்க்கு $165 million dollars பிரமாண்ட மாளிகையை வாங்கியுள்ளார்.

கடந்த 1930ம் ஆண்டுகளில் ஹாலிவுட் திரைப்படம் ஒன்றுக்காக அந்த மாளிகை வடிவமைக்கப்பட்டது. அமெரிக்காவில் உள்ள பிவெர்லி ஹில்ஸ் பகுதியில் 9 ஏக்கர் பரப்பளவில் இந்தப் புதிய வீடு அமைந்துள்ளது. தற்போது இந்த வீட்டைத்தான் பீசோஸ் தனது பெண் தோழிக்காக வாங்கியுள்ளார்.

தனது தோழிக்காக கடந்த ஓராண்டுக்கும் மேலாக வீடு தேடி தற்போது இந்த 9 ஏக்கர் வீட்டை வாங்கியுள்ளாராம் ஜெஃப் பீசோஸ். ஏக்கர் கணக்கிலான மொட்டை மாடியில் நிறைந்துகிடக்கும் தோட்டம் ஒரு வனம் போன்றே காட்சி அளிக்கிறதாம்.

சிடாடெல் நிறுவனர் கென் கிரிபின் Citadel founder Ken Griffin நியூயார்க்கில் 1,699 கோடி ரூபாய்க்கு மாளிகை வாங்கியிருந்தார். அதற்கடுத்ததாக மிக அதிக விலைக்கு வாங்கப்பட்ட மாளிகையாக இது கருதப்படுகிறது.


5 thoughts on “அமேசான் நிறுவனர் பெண் தோழிக்காக ரூ.1,178 கோடிக்கு பங்களா வாங்கியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://newstamil.in/