எல்லையில் சீன – இந்திய ராணுவம் மோதல் ராமநாதபுரம் வீரர் பலி!

லடாக் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவத்திற்கும் சீனா ராணுவத்திற்கும் ஏற்பட்ட மோதலில் ராணுவ உயர் அதிகாரி ஒருவர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

லடாக்கில் நடந்த ராணுவ மோதலில் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை தாலுகா, வீரசிங்கமடம், கடுக்கலூரை சேர்ந்த ராணுவ வீரர் பழனி என்பவர் மரணமடைந்துள்ளார்.

மேலும் அவருக்கு பத்து வயது மதிக்கத்தக்க மகன் மற்றும் எட்டு வயது மகள் உள்ளனர். மனைவி மற்றும் குழந்தைகள் ராமநாதபுரத்தில் வசித்து வந்ததாக முதலில் தெரியவந்துள்ளது.

அவரது உடல் நாளை காலை 9 மணி முதல் 12 மணிக்குள் உடல் கொண்டு வரப்பட்டு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என தற்போது தகவல் கிடைத்துள்ளது.


27 thoughts on “எல்லையில் சீன – இந்திய ராணுவம் மோதல் ராமநாதபுரம் வீரர் பலி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *