சென்னை உள்பட 4 மாவட்டத்தில் முழு ஊரடங்கு அறிவிப்பு – என்னென்ன இயங்காது?

சென்னை மற்றும் அதன் அருகிலுள்ள மாவட்டங்களில் கொரோனா வைரஸ் நோய்ப் பரவலைக் கருத்தில் கொண்டு, 15.6.2020 மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் குழுவுடன் நடத்தப்பட்ட ஆலோசனையின் அடிப்படையிலும், அமைச்சரவைக் கூட்டத்தின் ஆலோசனையின் அடிப்படையிலும் 19.6.2020 அதிகாலை 12 மணி முதல் 30.6.2020 இரவு 12 மணி வரை, 12 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிப்பு.

இருப்பினும் கீழ்க்கண்ட அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுடன் தளர்வுகள் அளிக்கப்படுகிறது:

 1. மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக்கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள்
 2. வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படாது. எனினும் அவசர மருத்துவ தேவைகளுக்கு மட்டும் வாடகை, ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படும்.
 3. மாநில அரசு துறைகள் 33 சதவீத பணியாளர்களுடன் செயல்படும். அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் தலைமை செயலகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, காவல்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மின்சாரத்துறை, கருவூலத்துறை, ஆவின் , உள்ளாட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தொழிலாளர் நலத்துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை போன்ற துறைகள் தேவைப்படும் பணியாளர்களுடன் செயல்படும்
 4. மத்திய அரசு அலுவலகங்கள் 33 சதவீத பணியாளர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படுவார்கள். அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் மத்திய அரசு அலுவலகங்கள் தேவையான பணியாளர்களுடன் பணிபுரிய அனுமதிக்கப்படும்.
 5. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பணியாளர்கள் பணிக்கு வர தேவையில்லை.
 6. வங்கிகள் 33 சதவீத பணியாளர்களுடன் 29 மற்றும் 30 தேதிகளில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். ஏடிஎம் இயந்திரங்கள் மற்றும் அது சம்பந்தப்பட்ட வங்கிப்பணி மற்றும் போக்குவரத்து வழக்கம் போல் செயல்படும்
 7. பொது விநியோக கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும். பொது விநியோக திட்டத்திற்கு தொடர்புடைய இந்திய உணவுக்கழகம் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகள் மற்றும் அதைசார்ந்த போக்குவரத்து அனுமதிக்கப்படும்.
 8. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் செயல்படும் பொது விநியோக கடைகள் இயங்காது. அந்த பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு அரசு அறிவித்த நிவாரணங்கள், அக்கடை பணியாளர்களால் நேரடியாக வழங்கப்படும்.
 9. காய்கறிகடைகள், மளிகைக்கடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகள் உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு சமூக இடைவெளியுடன் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். அதேபோல், காய்கறி,பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்ய நடமாடும் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணிவரை செயல்பட அனுமதிக்கப்படும். அத்தியாவசிய பொருட்களை வாங்கும் பொது மக்கள், வாகனங்களை பயன்படுத்தாமல் தாங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே அதாவது 2 கி.மீ., தொலைவில் மட்டும் நடந்து சென்று பொருட்களை வாங்க அறிவுறுத்தப்படுகின்றனர்.
 10. உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சல் மட்டும் அனுமதிக்கப்படும். தேநீர் கடைகள் இயங்க அனுமதியில்லை.
 11. முதியோர், மாற்றுத்திறனாளி, ஆதரவற்றோர் இல்லங்கள், வீட்டில் தங்கியிருக்கும் முதியோர்/நோயாளிகளுக்கு உதவி புரிவோர் ஆகியோருக்கு அனுமதி வழங்கப்படும்.
 12. அம்மா உணவகங்கள் மற்றும் ஆதரவற்றோருக்காக அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் சமையல் கூடங்கள் தொடர்ந்து செயல்படும்.
 13. பொது மக்களுக்கு உதவி செய்யும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் சம்பந்தப்பட்ட அரசு அலுவலரின் உரிய அனுமதியோடு இயங்கலாம்
 14. அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள்
 15. நீதித்துறை மற்றும் நீதிமன்றங்கள்
 16. மேற்கண்ட 12 நாட்களுக்கு பணியிட வளாகத்திலேயே தங்கியிருந்துபணிபுரியும் தொழிலாளர்களை கொண்ட கட்டுமான பணி அனுமதிக்கப்படும்.
 17. சரக்கு போக்குவரத்திற்கும், அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கும் தடை கிடையாது.
 18. சென்னையில் இருந்து திருமணம், மருத்துவம், இறப்பு ஆகிய காரணங்களுக்காக பிற மாவட்டங்களுக்கு செல்ல தகுந்த ஆதாரங்களை சமர்ப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் இ-பாஸ் அனுமதி வழங்கப்படும்.
 19. வெளி மாநிலத்தில் இருந்து வருகின்ற ரயில்களுக்கும், விமானங்களுக்கும் அதேபோல வெளிநாட்டில் இருந்துவருகின்ற விமானங்களுக்கும் கப்பல்களுக்கும் தற்போதுள்ள நடைமுறையே தொடரும்

140 thoughts on “சென்னை உள்பட 4 மாவட்டத்தில் முழு ஊரடங்கு அறிவிப்பு – என்னென்ன இயங்காது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://newstamil.in/