கேரளாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா! அதிர்ச்சி
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 ஆக இருந்த நிலையில், ஈரானில் இருந்து லடாக் வந்த இருவருக்கும், ஓமனில் இருந்து காஞ்சிபுரம் திரும்பிய ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கேரளாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 ஆக இருந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து எண்ணிக்கை 39 ஆக அதிகரித்தது.
கேரளாவில் பத்தனம்திட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தந்தை, தாய், குழந்தை மற்றும் இரு உறவினர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இத்தாலியில் இருந்து கடந்த மாதம் 29ஆம் தேதி இந்தியா வந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Comments are closed.