மாஸ்டர் இசை வெளியீட்டு தயாராகும் விஜய்!

விஜய் நடிப்பில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படம் மாஸ்டர். இப்படத்தை லோகேஷ் இயக்கியுள்ளார். இந்நிலையில் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் 15ம் தேதி நடக்கிறது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார், இதை தொடர்ந்து ஸ்ரீமன், சாந்தனு, விஜய் சேதுபதி என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலான லீலா பேலஸில் இந்த இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

மாஸ்டர் படத்தில் உதவி எழுத்தாளராக பணியாற்றிய ரத்னகுமார் செம்ம டுவிட் செய்துள்ளார் “அந்த மைக் எடுத்து வைங்கடா”, என்று அவர் செய்த ட்விட் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் மேயாதமான் மற்றும் ஆடை படத்தின் இயக்குனர்,

மேலும், பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் லைவ் டெலிகாஸ்ட் தவிர்க்கப்பட்ட நிலையில், மாஸ்டர் ஆடியோ லாஞ்ச் லைவ் டெலிகாஸ்ட் செய்யப்படுகிறது என்று ஒரு தகவல் பரவி வருகிறது.



Comments are closed.

https://newstamil.in/