எல்லா மதமும் சம்மதம், கந்தனுக்கு அரோகரா – ரஜினிகாந்த் அறிக்கை

கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் கந்த சஷ்டி கவச விவகாரத்தில் சரியான நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நன்றி, கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து பல கோடி தமிழ் மக்களை புண்படுத்தி கொந்தளிக்க செய்து விட்டனர். கந்தனுக்கு அரோகரா என்ற ஹேஸ்டேக் மூலம் சமூக வலைதளத்தில் ரஜினிகாந்த் பதிவு.

  • கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு ரஜினி பாராட்டு
  • கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி ஈனச் செயலில் ஈடுபட்டவர்கள் வாழ்வில் மறக்க முடியாத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – ரஜினிகாந்த்
  • முருக பக்தர்கள் மனம் புண்படும்படியான வீடியோக்களை நீக்கிய தமிழக அரசுக்கு மனமார்ந்த பாராட்டு – ரஜினிகாந்த்
  • தமிழகத்தில் மத துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழிய வேண்டும் – ரஜினிகாந்த்
    எல்லா மதமும் சம்மதமே, கந்தனுக்கு அரோகரா என்றும் ரஜினி ட்வீட்
    கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியதால் பல கோடி தமிழ் மக்கள் கொந்தளித்துள்ளனர் – ரஜினிகாந்த்

Comments are closed.

https://newstamil.in/