Thursday, September 10, 2026
LatestNEWS

டெல்லி வன்முறை: 600 பேர் கைது; 130 பேர் மீது எஃப்.ஐ.ஆர்!

டெல்லி வன்முறை தொடர்பாக டெல்லி போலீசார் 600 பேரை கைது செய்துள்ளனர், அதே நேரத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் 130 எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தில்லி போலீஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்த வழக்குகளில் 28 எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளன. விசாரணையில் சுமார் 600 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அனைவரையும் விசாரித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.” டெல்லி காவல்துறை அமைதியை நிலைநாட்டவும், வதந்திகளை புறக்கணிக்கவும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தது.


Comments are closed.