மார்ச்-22 ம் தேதி ‘மக்கள் ஊரடங்கு’ நடத்த வேண்டும் : மோடி வேண்டுகோள்

கொரோனா வைரஸ் குறித்து பிரதமர் மோடி நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியதாவது – கொரோனா இந்தியாவை தாக்காது என்பது தவறு.இதனை தடுக்க உறுதி மற்றும் கட்டுப்பாடு தேவை.மக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியே செல்லவேண்டாம். மக்கள் அலுவலகங்களுக்கு செல்வதை தவிர்த்து வீட்டில் இருந்தே வேலை செய்ய வேண்டும்.

கொரேனா வைரஸ் நம்மை ஒன்றும் செய்யாது என எண்ண வேண்டாம். கொரோனாவை தடுத்து நமது வலிமையை நிருபிப்போம். மக்களுக்காக , மக்களே சுயமாக ஊரடங்கு நடைமுறையை பின்பற்றுவோம்.

வரும் ஞாயிறு அன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்களே ஊரடங்கு நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அன்றைய தினம், மக்கள் யாரும் மிகமிக அத்தியாவசியம் இன்றி வெளியே வர வேண்டாம். மருத்துவனைகள் உள்ளிட்ட இடங்கள் வழக்கம் போல இயங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி உரை

  • உலகம் மிகப்பெரிய சவாலை சந்தித்து வருகிறது
  • உலகப் போரை விட அதிக நாடுகளை பாதித்துள்ளது கொரோனா
  • தற்போது கொரோனாவை விட முக்கிய பிரச்சினை ஏதும் இல்லை
  • கொரோனா தாக்குதலை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது
  • ஒவ்வொரு இந்தியனும் விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம் இது
  • திடீரென இந்த வைரஸ் சில நாடுகளில் வேகமாகப் பரவி விட்டது
  • கொரோனா வைரஸ் பரவியது குறித்து இந்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது
  • சில நாடுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வைரஸ் பரவலை தடுத்துள்ளது
  • மக்களை தனிமைப்படுத்தி, பரவலை தடுத்துள்ளது
  • 130 கோடிக்கும் மேல் மக்களை கொண்ட இந்தியா இதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது
  • மத்திய சுகாதார துறை அமைச்சர் இதுவ…
  • கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி உரை
  • உலகம் மிகப்பெரிய சவாலை சந்தித்து வருகிறது
  • உலகப் போரை விட அதிக நாடுகளை பாதித்துள்ளது கொரோனா
  • தற்போது கொரோனாவை விட முக்கிய பிரச்சினை ஏதும் இல்லை
  • கொரோனா தாக்குதலை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது
  • ஒவ்வொரு இந்தியனும் விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம் இது
  • திடீரென இந்த வைரஸ் சில நாடுகளில் வேகமாகப் பரவி விட்டது
  • கொரோனா வைரஸ் பரவியது குறித்து இந்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது
  • சில நாடுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வைரஸ் பரவலை தடுத்துள்ளது
  • மக்களை தனிமைப்படுத்தி, பரவலை தடுத்துள்ளது
  • 130 கோடிக்கும் மேல் மக்களை கொண்ட இந்தியா இதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது
  • மத்திய சுகாதார துறை அமைச்சர் இதுவரை 8 உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார்
  • கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா பற்றிய தகவல்களை கவலையுடன் உலகம் பார்த்து வருகிறது
  • நாம் ஆரோக்கியமாக இருந்தால், உலகம் ஆரோக்கியமாக இருக்கும் – இதுவே நம் தாரக மந்திரம்
  • முதியவர்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்
  • வீட்டில் இருந்தே பணி செய்யும் முறைக்கு மாற வேண்டும்
  • இரவு நேரங்களில் வெளிவருவதை தவிர்ப்பது நல்லது
  • தற்போது நாட்டு மக்களிடம் நான் ஒத்துழைப்பை வேண்டுகிறேன்

Comments are closed.

https://newstamil.in/