தமிழகத்தில் 2வது நபருக்கு கொரோனா உறுதி: விஜயபாஸ்கர்

சென்னை: டில்லியில் இருந்து சென்னைக்கு வந்த ஆம்பூரை சேர்ந்த 20 வயது நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்த 2வது நபர் இவர்.

இது குறித்து சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது;

பயணங்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம், டெல்லியில் இருந்து சென்னை வந்த ஆம்பூரை சேர்ந்த நபர் 20 வயது இளைஞருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது உறுதியானது.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அந்த இளைஞர் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார், கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளைஞரின் உடல்நிலை சீராக இருக்கிறது.

அந்த இளைஞர் யாருடன் தொடர்பில் இருந்தார் என்பதை கண்டறிய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நபர் ரயில் மூலம் சென்னை வந்துள்ளார், ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த காஞ்சிபுரம் பொறியாளர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் ஆனார்.

மாஸ்க், சானிடைசர், உடல் வெப்ப அளவிடும் கருவியை அதிக விலைக்கு விற்றால் நாளை முதல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.



Comments are closed.

https://newstamil.in/