சென்னையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: சென்னை பாதுகாப்பான இடமா?

கொரோனா வைரசுக்கு இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை 5,734 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில் 473 பேர் குணமாகியுள்ளனர். 166 பேர் உயிரிழந்துள்ளனர். 5,095 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒட்டுமொத்தமாக சென்னை மாவட்டம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முதலிடத்தில் உள்ளது. சென்னையில் மட்டும் 156 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையை அடுத்து கோவையில் 60 பேர்களும், திண்டுக்கல்லில் 46 பேர்களும், திருநெல்வேலியில் 40-பேர்களும், திருச்சியில் 36 பேர்களும் ஈரோட்டில் 32 பேர்களும், நாமக்கல்லில் 33 பேர்களும் ராணிப்பேட்டையில் 27 பேர்களும் செங்கல்பட்டில் 24 பேர்களும் மதுரையில் 24 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கொரோனா பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி வீடு விடாக நடத்திய கணக்கெடுப்பு விவரங்கள் வெளியாகி உள்ளன. கொரோனா பரவுவதை தடுக்க சென்னை மாநகராட்சிபல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதில் ஒன்றாக வீடு வீடாக கணக்கெடுப்பு ஒன்றை நடத்தி உள்ளது.

இந்நிலையில், கொரோனாவால் சென்னையில் அச்சப்படக்கூடிய சூழல் இதுவரை எங்கும் இல்லை என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். மேலும், வீடு வீடாக ஆய்வு செய்யும்போது மக்கள் மறைக்காமல் தங்களிடம் உள்ள உடல்நலப் பிரச்னைகளை கூற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.


79 thoughts on “சென்னையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: சென்னை பாதுகாப்பான இடமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://newstamil.in/