சித்ரா தற்கொலை வழக்கில், கணவர் ஹேம்நாத் கைது

நடிகை சித்ரா தற்கொலை வழக்கில், நடத்தையில் சந்தேகப்பட்டு சித்ராவுடன் ஹேம்நாத் சண்டையிட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேம்நாத் IPC 306-இன் படி கைது செய்யப்பட்டு பொன்னேரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட நடிகை சித்ராவின் மார்பிலும் காயங்கள் இருந்ததாக அவரது தாய் மாமா கூறியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது. சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டு வரும் நிலையில் அவரது முகத்தில் இருந்த காயங்கள் அவரது மரணம் தற்கொலைதானா என்ற சந்தேகத்தை எழுப்பியது.

நடிகை சித்ரா கடந்த 9 தேதி அதிகாலை தனியார் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட நிலையில், அவரது கணவர் ஹேம்நாத்திடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் பெண் உயிரிழந்தால் வரதட்சணை தடுப்புச்சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர் விசாரணை செய்வது வழக்கம். அதன் அடிப்படையில் சித்ராவின் தாயார் விஜயா, தந்தை காமராஜ் மற்றும் அக்கா சரஸ்வதி ஆகியோருக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இந்நிலையில் மூவரும் ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் அலுவலகத்தல் நேரில் ஆஜராகினர். அவர்களிடம் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ மூன்று மணி நேரம் விசாரணை மேற்கொண்டார். அப்போது, சித்ராவுக்கு அவர் கணவரின் குடும்பத்தின் தரப்பில் வரதட்சணை கொடுமை போன்று ஏதேனும் தொல்லை கொடுக்கப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில் சித்ராவின் தாய் மாமாவான சுரேஷ், அவரது மரணம் குறித்து பல்வேறு திடுக் தகவல்களை கூறியுள்ளார். அதாவது சித்ரா சேலையில் தூக்குப் போட்டிருந்தால் அவரது கழுத்தில் காயம் இருக்கணுமே என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் கழுத்தில் எந்த காயமும் இல்லாமல் கன்னம் மற்றும் தாடை, நெற்றி உள்ளிட்ட இடங்களிலும் அடிப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் சித்ராவின் மார்பிலேயும் அடிபட்டுள்ளதாக கூறி பகீர் கிளப்பியுள்ளார்.

மேலும் தங்களின் பொண்ணு தைரியமானவர் என்றும் சித்துவின் மரணத்தில் ஏதோ மர்மம் உள்ளது என்றும் சத்தியம் செய்துள்ளார். மேலும் சித்ராவின் மரணத்திற்கு நியாயம் வேண்டும் என்றும் அவரது தாய் மாமாவான சுரேஷ் கதறியுள்ளார்.

மேலும் விசாரணை முடிந்து வெளியே வந்த சித்ராவின் தாயார் விஜயா, செய்தியாளர்களிடம் பேசுகையில், தனது மகளின் தற்கொலைக்கு, அவரின் கணவர் ஹேம்நாத்தான் காரணம் என மீண்டும் குற்றம்சாட்டினார். அதேவேளையில், தனக்கும், சித்ராவுக்கும் எந்தவொரு மனக்கசப்பும் இருந்ததில்லை எனவும் கூறியிருந்தார். இந்நிலையில், தற்போது ஹேம்நாத் தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.



Comments are closed.

https://newstamil.in/