2 நாட்களில் திமுகவில் 2 எம்.எல்.ஏ.கள் மரணம்!
குடியாத்தம் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., காத்தவராயன் உடல்நலக்குறைவால் காலமானார், அவருக்கு வயது 57. குடியாத்தம் தொகுதியில் கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் காத்தவராயன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த அவருக்கு, இதய அறுவை சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 10 நாட்களுக்கு முன் சென்னை அப்போலோ மருத்துவமனையில், இதய அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இந்நிலையில் உடல்நிலையில் முன்னேற்றம் இன்றி, காத்தவராயனின் உயிர் இன்று பிரிந்தது.
திருவொற்றியூர் திமுக எம்எல்ஏ கேபிபி சாமி நேற்று மரணம் அடைந்த நிலையில், குடியாத்தம் எம்எல்ஏ காத்தவராயன் இன்று உயிரிழந்துள்ளார். 2 நாட்களில் திமுகவைச் சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் மரணம் அடைந்துள்ளதால், சட்டப்பேரவையில் திமுகவின் பலம் 98-ஆக குறைந்துள்ளது.
Comments are closed.