ஷங்கரை விருந்தினர் போல் அழைத்துச்சென்றதால் சர்ச்சை!

இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக, சென்னை மத்திய குற்ற புலனாய்வு போலீசாரின் விசாரணைக்கு இயக்குநர் ஷங்கர் ஆஜரானார், அலுவலகத்திற்கு வந்த இயக்குநர் ஷங்கரை, விருந்தினர் போல உதவி ஆணையர்கள் அழைத்துச்சென்றதால் சர்ச்சை எழுந்துள்ளது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துவரும் இந்தியன்-2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து விபத்துக்குள்ளானதில் உதவி இயக்குநர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்துவருகின்றனர்.

லைக்கா மீது குற்றஞ்சாட்டி நடிகர் கமல்ஹாசன் அறிக்கைவிட்டிருந்த நிலையில், படப்பிடிப்புத் தளத்தில் அனுபவம் வாய்ந்த நடிகர் கமல்ஹாசனும், இயக்குனர் ஷங்கரும் படப்பிடிப்பில் இருந்ததால் அவர்கள் பொறுப்புடன் கவனித்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் விட்டிருந்ததாக கூறி லைக்கா பதில் அறிக்கை வெளியிட்டது.

சென்னை மத்திய குற்ற புலனாய்வு போலீசார் இயக்குனர் ஷங்கர் விசாரணைக்காக அலுவலகம் வந்தார். அவர் வந்திருக்கும் தகவல் அறிந்ததும், மக்கள் தொடர்பு அதிகாரியாக உள்ள உதவி ஆணையர் ஒருவர், காவல் ஆணையரை சந்திக்க வரும் முக்கிய விருந்தினர்களை அழைத்துச்செல்வது போல ஷங்கரை யார் கண்ணிலும் படாமல் சிறப்பு வழியில் உயரிய விருந்தினர் போல விசாரணைக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகின்றது.

விசாரணை முடிந்ததும் லிப்ட்டில் ஏற்றி பின் பக்கமாக அழைத்து சென்று அவரது வழக்கறிஞரின் காரில் ஏற்றி பத்திரமாக வழியனுப்பி வைத்துள்ளார் மக்கள் தொடர்பு பொறுப்பில் உள்ள உதவி ஆணையர் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.Comments are closed.

https://newstamil.in/